மேலும் செய்திகள்
பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
27-May-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், துாய்மை பணியாளர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில், காசநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார், காசநோய் நலக் கல்வியாளர் பாபு சுதந்திரநாத் முன்னிலை வகித்தனர். அதில், காசநோய் நோய் வருவதற்கான அறிகுறிகள் குறித்தும், பரிசோதனை முறைகள் குறித்தும் பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது.அதை தொடர்ந்து, புகையிலை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
27-May-2025