உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வைகுண்ட பெருமாள் கோவிலில் பாலாலயம்

வைகுண்ட பெருமாள் கோவிலில் பாலாலயம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2007ல் நடந்தது. இந்நிலையில், கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது.இதையொட்டி, நேற்று காலை, கோவிலில் பாலாலயம் நடந்தது. தொல்லியல் துறையின், ரசாயன பொறியாளர் பிரிவினர், கோவில் கோபுரத்தை ரசாயன கலவை வாயிலாக, புதுப்பொலிவு பெறும் வகையில் புதுப்பிக்க உள்ளனர் என, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இப்பணி முடிந்ததும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஆலோசித்து வருவதாக ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி