உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கைகளால் பில் எழுதப்பட்டு கனிமங்கள் சுரண்டப்படுகின்றன ; லாரி உரிமையாளர் சங்க தலைவர் புகார்

கைகளால் பில் எழுதப்பட்டு கனிமங்கள் சுரண்டப்படுகின்றன ; லாரி உரிமையாளர் சங்க தலைவர் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.இதில், பட்டா, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் என, பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 178 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கீழ்கதிர்பூர் கிராமத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள 2,112 வீடுகள் மத்தியில் உள்ள கடைகளை நடத்த ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்ட, எட்டு பயனாளிகளுக்கு, கடை ஒதுக்கீடு ஆணைகளைகலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.இக்கூட்டத்தில், மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் கனிமவளத் துறை அலுலவலகத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை நாங்கள் பல்வேறு முறை வலியுறுத்தி வருகிறோம்.கனிமவளத் துறை கீழ் நடைபெறும் ஜல்லி, எம்.சாண்ட், சவுடு மணல் போன்றவை உற்பத்தியில் பெருமளவில் முறைகேடு நடைபெற்று வருகிறது.பல்வேறு துறைகளில் வழங்கப்படும் ரசீதுகள் கணினி முறையில் வழங்கப்படும் நிலையில், கனிமவளத் துறையில் மட்டும் கைகளால் எழுதப்படும் ரசீது வழங்கப்படுகிறது. மேலும், 100 லோடுக்கு அனுமதி வாங்கி கொண்டு, 1,000 முதல் 1,500 லோடுகள் திருட்டுத்தனமாக கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய்க்கு மேலாக இழப்புஏற்படுகிறது.மேலும், ரசீது கைகளால் எழுதப்படுவதால், அவை திருத்தப்பட்டு கனிமங்கள் சுரண்டப்படுகின்றன. கனிணி முறையில் ரசீது கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ