நுால் வெளியீட்டு விழா
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், 'சிவஞான மாபாடியம்' விரிவுரை நுால் வெளியீட்டு விழா நடந்தது. திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், 'சிவஞான மாபாடியம்' என்ற விரிவுரை நுால் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அறக்கட்டளை நிறுவனர் சதாசிவம் நுாலை வெளியிட, முதல் பிரதியை அருணை பாலறாவாயன் பெற்று கொண்டார். அறக்கட்டளை அறங்காவலர்கள் பெருமாள், ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து, பேராசிரியர் சிவ சண்முகம், அருணை.பாலறாவாயன் ஆகியோர் சிவஞான மாபாடியம் நுால் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினர்.