மேலும் செய்திகள்
பல்லாங்குழியான மொளச்சூர் சாலை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
10 minutes ago
கருங்குட்டை சுடுகாட்டில் மின் விளக்கு அமைப்பு
13 minutes ago
சதாவரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, சதாவரம் சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 1,060 தெருக்களில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது சதாவரம் சாலையோரம் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் குடிநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடையும் நிலையில் உள்ளது. எனவே, சதாவரம் சாலையோரம், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
10 minutes ago
13 minutes ago