உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரு நிழற்குடை திறப்பு பஸ் பயணியர் மகிழ்ச்சி

இரு நிழற்குடை திறப்பு பஸ் பயணியர் மகிழ்ச்சி

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி மற்றும் சாலவாக்கம் ஆகிய கிராமங்களில், 2024 -- 25ம் நிதியாண்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12.72 லட்சம் ரூபாய் செலவில், இருபயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டன.இந்த நிழற்குடையை பயணியர் பயன்பாட்டிற்காக, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார்.தொடர்ந்து, எடமச்சி கிராமத்தில், 2024 -- 25ம் நிதியாண்டில், அயோத்தியதாச பண்டிதர் குடியிருப்பு திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. எடமச்சி ஊராட்சி தலைவர் தர்மராஜ், தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !