உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

காஞ்சிபுரம்: பிளாஸ்டிக் பொருட் களுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பொருட்களை கையாளும் பள்ளி, கல்லுாரி, நிறுவனங்களு க்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப் பு : 'மீண்டும் மஞ்சப்பை'பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் துறை அ மைச்சர், 2022-- 23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்ட சபையில் அறிவித்தார். ஒருமுறை மட் டும் பயன்படும் பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் சிறந்த மூன்று பள்ளிகள், மூ ன்று கல்லுாரிகள் மற்றும் மூன்று வணிக நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படும். முதல் பரிசாக 10 லட்சம், இரண்டாம் பரிசாக 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக 3 லட்சம் பரிசு வழங்கப்ப டும். இந்த அறிவிப்பின்படி, மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற் றாக சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும், முன்மாதிரி யான பங்களிப்பு செய்த பள்ளிக ள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க உள்ளது. விண்ணப்ப படிவங்கள், https://kancheepuram.nic.in, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளமான https:/ /tnpcb.gov.inஆகியவற்றில் தரவிறக்கம் செய்து 2026 ஜனவரி 15க்குள் சமர்ப்பிக்க வேண் டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்