உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்து நாசம்

சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்து நாசம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமடைந்தது.செம்பரம்பாக்கத்தை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி மஞ்சுளா. தம்பதியர் இருவரும், நேற்று காலை, ‛வோல்ஸ் வேகன்' காரில், செம்பரம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊரான வேலுருக்கு சென்றனர்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே வந்த போது, காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது.இதையடுத்து, காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, தம்பதியர் இருவரும் காரியில் இருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில், கார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு வந்த, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத் துறை வீரர்கள், தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.அதற்குள் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை