உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

குன்றத்துார்:குன்றத்துாரைச் சேர்ந்தவர் சவுந்தரராஜ், 34; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரியா, 27. இருவரும், சோமங்கலம் அருகே, அமரம்பேடு பகுதியில் இருந்து குன்றத்துார் நோக்கி, நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றனர். அப்போது, பைக்கில் வந்த நபர்கள் பிரியாவின் 5 சவரன் செயினை பறித்து தப்பினர்.இதில், பிரியா பைக்கில் இருந்து கீழே விழுந்ததில், அவரது கை, கால், தலையில் காயம் ஏற்பட்டது. சவுந்தரராஜ் காயமின்றி தப்பினார்.இதையடுத்து, பிரியா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சம்பவம் குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை