மேலும் செய்திகள்
காஞ்சி பழனி முருகன் கல்யாண உத்சவம்
3 hour(s) ago
கால்நடைகள் கொட்டகையான அரசு துவக்கப்பள்ளி திண்ணை
3 hour(s) ago
இடையம்புதுார் சமூக காட்டில் தொடரும் மண் கடத்தல்
3 hour(s) ago
பெருநகர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழா, கடந்த 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருகிறார்.இதில், ஏழாம் உற்சவமான நேற்று, தேரோட்டம் விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தையொட்டி, நேற்று அதிகாலை மூலவர், பிரம்மபுரீஸ்வரருக்கும், பட்டுவதனாம்பிகை அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.அதை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பிகையுடன், பிரம்மபுரீஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.பல்வேறு பூஜைகளுக்குப் பின் காலை 10:00 மணிக்கு, பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பட்டது.பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று பிற்பகல் 1:30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைந்தது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago