உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நாளை தேரோட்டம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நாளை தேரோட்டம்

பெருநகர் : காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான தைப்பூச விழா, கடந்த 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி தினமும் காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.தைப்பூச விழாவின், ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று காலை பட்டுவதனாம்பிகை அம்பாள் பூமால் செட்டிகுளம் செல்லும் நிகழ்வு நடந்தது. இரவு, திருக்கல்யாண உற்சவம் மற்றும் ரிஷப வாகன சேவை நடந்தது.இதில், ஏழாம் நாள் உற்சவமான, நாளை காலை, தேரோட்டமும், பிரபல உற்சவமான செய்யாற்றில், 22 ஊர் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தைப்பூச தரிசன காட்சி வரும் 26ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ