உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பின்றி செட்டியார்பேட்டை குளம்

தடுப்பின்றி செட்டியார்பேட்டை குளம்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நான்கு வழி சாலை, ஆறுவழி சாலையாக விரிவு மற்றும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதில், சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், காரப்பேட்டை அடுத்த, செட்டியார்பேட்டை பகுதியை கடந்து செல்ல வேண்டும். இந்த செட்டியார்பேட்டை கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான குளம் உள்ளது.இந்த குளத்தை ஒட்டி செல்லும் வாகனங்கள், சாலையோர தடுப்பு இல்லாததால் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி குளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக இருக்கும் குளத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை