மேலும் செய்திகள்
2024ல் 268 பேர் உடல் உறுப்பு தானம்
03-Jan-2025
உடல் உறுப்பு தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
27-Jan-2025
காஞ்சிபுரம், விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை,உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு தானமாக அளித்து பலரின் உயிரை, அவர்களது குடும்பத்தினர் காப்பாற்றுகின்றனர். அவ்வாறு, உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையில், தமிழகம் முன்னிலை வகிக்கிறது. உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், கடந்த 2023 அக்டோபரில், தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அவரது வீட்டிற்கு சென்று, கலெக்டர் மரியாதை செலுத்த வேண்டும்.அவர் செல்ல முடியாவிட்டால், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் கலெக்டர், சப் - கலெக்டர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரில் ஒருவர் செல்ல வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர், 2024ல், உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு மரியாதை செலுத்தி வந்தனர்.ஆனால், சமீப நாட்களாக, கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் கூட, நேரில் சென்று மரியாதை செலுத்துவதில்லை.மாறாக, தாசில்தார்களை அனுப்பி, உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு மரியாதை செலுத்துவது அதிகரித்து வருகிறது.குன்றத்துார் தாலுகா சிக்கராயபுரத்தில், கடந்த 17ம் தேதி குணசுந்தரி என்பவரது உடலுக்கும், குன்றத்துார் நகரில், 23ம் தேதி சுப்ரியா என்பவரது உடலுக்கும் தாசில்தார்கள் அனுப்பப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்டத்தில்,கலெக்டர் உள்ளிட்டஉயரதிகாரிகள் செல்ல முடியாத சூழலில், கோட்டாட்சியர் நிலையிலான துணை கலெக்டர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், எந்த துணை கலெக்டர்களும் செல்லவில்லை.கடந்த 2025ம் ஆண்டு துவங்கி, இரு வேறு இடங்களிலும் தாசில்தார்களே சென்று மரியாதை செலுத்துவது தொடர்கிறது. இதனால், உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் உத்தரவு காற்றில் பறப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
03-Jan-2025
27-Jan-2025