உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூத்திரமேடு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆபத்தை உணராமல் குதித்து விளையாடும் சிறுவர்கள்

கூத்திரமேடு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆபத்தை உணராமல் குதித்து விளையாடும் சிறுவர்கள்

கூத்திரமேடு: காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கூத்திரமேடு சிறுபாலத்தில் இருந்து, ஆற்றில் குதித்து விளையாடும் சிறுவர்கள் ஆபத்தில் சிக்கும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த கிளார் பகுதியில், பாலாற்றில் இருந்து பிரியும், வேகவதி ஆறு, முசரவாக்கம், மேல்ஒட்டிவாக்கம், கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் வழியாக சென்று திம்மராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் இணைகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூத்திரமேடு வழியாக செல்லும் வேகவதி ஆற்றில் ஆபத்தை உணராமல் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், கூத்திரமேடு சிறுபாலத்தில் இருந்து வெள்ளநீர் செல்லும் வேகவதி ஆற்றில் ஆபத்தான முறையில் குதித்து விளையாடுகின்றனர். திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் அபாயம் உள்ளது. எனவே, கூத்திரமேடு வேகவதி ஆறு சிறுபாலம் அருகில் குளிப்பதற்கு தடை விதித்து, எச்சரிக்கை பலகையுடன், வேகவதி ஆற்றங்கரையோரம் தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூத்திரமேடு கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை