உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் கால்வாயில் அடைப்பு அருந்ததியர் நகரில் சுகாதார சீர்கேடு

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு அருந்ததியர் நகரில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 21வது வார்டு, திருக்காலிமேடு அருந்ததியர் நகரில், கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 21வது வார்டு, திருக்காலிமேடு அருந்ததியர் நகர் 2வது தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண் துகள் மற்றும் குப்பையால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால் கழிவுநீரில் புழுக்கள் உருவாகியுள்ளதோடு, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மாநகராட்சி 21வது வார்டு, திருக்காலிமேடு அருந்ததியர் நகரில், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கி, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை