உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடையில் அடைப்பு கோவிலுக்குள் புகுந்த கழிவுநீர்

பாதாள சாக்கடையில் அடைப்பு கோவிலுக்குள் புகுந்த கழிவுநீர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டில், யதோக்தகாரி பெருமாள் கோவில் தெருவில், சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் பெய்யும் மழைநீர், புதைவடிகால்வாய் வாயிலாக வெளியேறும் வகையில், பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் வெளியேற வேண்டிய பைப்லைன் வழியாக கழிவுநீர் 'ரிடர்ன்' ஆகி கோவில் வளாகத்தில், துர்நாற்றத்துடன் தேங்கியுள்ளது.எனவே, யதோக்தகாரி பெருமாள் கோவில் தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை