மேலும் செய்திகள்
மழைநீர் கால்வாயா... வயல்வெளியா?
21-Sep-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மழைநீர் வெளியேறும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் வடிகால்வாய் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில், ராஜாஜி மார்க்கெட் அருகில், மழைநீர் குளம்போல தேங்குவதால், முழுமையாக வெளியேறும் வகையில், மாநகராட்சி சார்பில், நான்கு மழைநீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.இருப்பினும் முறையான பராமரிப்பு இல்லாததால், வடிகால்வாய் மற்றும் மழைநீர் உறிஞ்சு குழாய்களில் குப்பை குவியலால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மழைநீர் வெளியேற வழியின்றி, சாலையில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.நாள் கணக்கில் தேங்கும் மழைநீரில் ‛ஏடிஸ்' கொசு உருவாகும் சூழல் உள்ளது. எனவே, ரயில்வே சாலையில் மழைநீர் முழுதும் வெளியேறும் வகையில், வடிகால்வாயையும், மழைநீர் உறிஞ்சு குழிகளையும் சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
21-Sep-2024