உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆடைகள், கவரிங் செயின் பறிமுதல்

பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆடைகள், கவரிங் செயின் பறிமுதல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, திம்மசமுத்திரத்தில் வீட்டை கொள்ளையடிக்கும்போது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சில ஆடைகள், ஒரு கவரிங் செயின் மட்டுமே திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜெயசுரேஷ், 39. இவரது மனைவி அஸ்வினி, 30. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அஸ்வினி பணியாற்றியதால், காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஜெயசுரேஷும், அஸ்வினியும், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 23ல், இரவு 11:30 மணியளவில், யாரும் இல்லாதபோது, இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, அங்கு வந்த அஸ்வினியை தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில், பாலுச்செட்டிச்சத்திரம் தமிழ்வாணன், 28, பள்ளம்பாக்கம் ராஜசேகர், 24, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அஸ்வினி வீட்டி லிருந்து ஒரு கவரிங் செயின், சில ஆடைகள் ஆகியவை மட்டுமே திருடு போனதாகவும், அவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ