உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோ- - ஆப்டெக்ஸ் விற்பனை தீபாவளிக்கு ரூ.1 கோடி இலக்கு

கோ- - ஆப்டெக்ஸ் விற்பனை தீபாவளிக்கு ரூ.1 கோடி இலக்கு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோ -ஆப்டெக்ஸ் கிளையின், நடப்பாண்டு தீபாவளி விற்பனை, ஒரு கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயித்து, அதற்கான விற்பனையை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கைத்தறி துறையின் முதன்மை செயலர் அமுதவல்லி, கைத்தறி துறை இயக்குநர் மகேஸ்வரி, கோ -ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் கவிதா, காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் கோ -- ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தில், கடந்தாண்டு 74 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயித்து விற்பனை துவங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கைத்தறி ரகங்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பட்டு சேலை, வேட்டி, ரெடிமேட், காட்டன் சேலைகள் உள்ளிட்ட துணி வகைகள் தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் காந்தி சாலையில், திருவள்ளுவர் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தின், சீரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை, அமைச்சர் காந்தி நேற்று திறந்து வைத்தார். இச்சங்கத்தில், ஆண்டுதோறும் 7 கோடி ரூபாய் மதிப்பில் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு 11 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை