உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கலை, இலக்கிய படைப்புகளை வெளியிட உதவித்தொகை வழங்க கலெக்டர் முடிவு

கலை, இலக்கிய படைப்புகளை வெளியிட உதவித்தொகை வழங்க கலெக்டர் முடிவு

காஞ்சிபுரம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் இலக்கிய, கலை படைப்புகளை வெளியிட, 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில், 11 நபர்களது படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சிறந்த இலக்கிய படைப்புகளை வெளியிட தலா, 1 லட்சம் ரூபாய் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட உள்ளது. எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை. கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும் இருக்கலாம். அவை தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும். படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். படைப்புகளை தேர்ந்தெடுத்தல் குறித்து, அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழுவின் முடிவே இறுதியானது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை, காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ., 28க்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ