உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் குறித்த புகார்கள் மீது நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு

குடிநீர் குறித்த புகார்கள் மீது நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.அப்போது, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவும், குடிநீர் சம்பந்தமான புகார்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.இக்கூட்டம் நடைபெறும் முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் துவங்கியுள்ள 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்ட பயனாளிகளிடம் நேரடியாக மொபைல்போனில்தொடர்பு கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ