உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலவாக்கத்தில் ரூ.7.85 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகம்

 சாலவாக்கத்தில் ரூ.7.85 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகம்

உத்திரமேரூர்: சாலவாக்கத்தில், ரூ.7.85 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு வரும் சமுதாய சுகாதார வளாகம், இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முடிந்து பயன் பாட்டிற்கு வரும் என, ஊராட்சி தலைவர் சத்யா தெரிவித்தார். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில், 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக, துணை சுகாதார நிலையம் அருகே, சமுதாய சுகாதார வளாகம் அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 7.85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஐந்து மாதத்திற்கு முன், கட்டு மான பணி துவக்கப்பட்டது. தற்போது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறைகள், குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் நலன் கருதி சாய்தள பாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில், சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணிகள், 90 சதவீதம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து ஊராட்சி தலைவர் சத்யா கூறுகையில், ''சாலவாக்கத்தில், சமுதாய சுகாதார வளாகம் 7.85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முழுதுமாக முடிக்கப்பட்டு, சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை