உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கோவிலில் பெண் அதிகாரியிடம் தகராறு செய்தவர் மீது புகார்

 கோவிலில் பெண் அதிகாரியிடம் தகராறு செய்தவர் மீது புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெண் அதிகாரியிடம் தகராறு செய்தவர் குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் உதவி கமிஷனராக ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கோவில் அலுவலகத்தில் நேற்று மாலை பணியில் இருந்தபோது, அலுவலகத்திற்குள் விவேக் சூர்யா என்பவர் வந்துள்ளார். அப்போது, உதவி கமிஷனர் ராஜலட்சுமியிடம் ஒரு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை கொடுத்து அவற்றை பதிவு செய்து, ஒப்புகை சீட்டு கேட்டுள்ளார். இதற்கு, ஒப்புகை சீட்டு வழங்க முடியாது என, கோவில் அதிகாரி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோவில் அலுவலகத்தை மொபைல் போனில் விவேக் சூர்யா படம் பிடித்துள்ளார். அவரது மொபைல் போனை, கோவில் அதிகாரிகள் கேட்டபோது, அவருக்கும் கோவில் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வேட்டியை அவிழ்த்து அறுவறுப்பாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த கோவில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி, விஷ்ணுகாஞ்சி போலீசில், விவேக்சூர்யா மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, கோவில் உதவி கமிஷனர் ராஜ லட்சுமி கூறியதாவது: கோவில் திருப்பணி சம்பந்தமாக அவர் லெட்டர் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கையெழுத்து இல்லை. ஒப்புகை சீட்டை கோவில் ஊழியரிடம் வாங்கி கொள்ள சொன்னேன். அதற்கு அவர் வாக்குவாதம் செய்து, மொபைல் போனில் படம் எடுத்து பிரச்னை செய்து விட்டார். வேட்டியையும் அவிழ்த்து போட்டு பிரச்னை செய்தார். அதனாலேயே புகார் கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ