உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்கள்

பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்கள்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, சின்ன நாரசம்பேட்டை தெருவில் அரசு முன்மாதிரி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி முன், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கிய வாகனங்கள் மற்றும் மணல், கஞ்சா திருட்டில் பயன்படுத்திய லாரி, டிராக்டர், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தின் உள்ளே பறிமுதல் செய்யப்பட்ட லாரியும் நிறுத்தப்பட்டு உள்ளது.இதனால், பள்ளி மாணவர்கள் விளையாடும்போது விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, பள்ளிக்கு முன் மற்றும் உள்ளே நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பள்ளியின் வளாகத்தில் லாரி நிறுத்தப்பட்டு உள்ளதால், மாணவர்கள் விளையாட முடியாமல், விளையாட்டு திறன் பாதிக்கப்படுகிறது.இதுபோன்ற பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, பள்ளி பகுதியில் நிறுத்துவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை