உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 150 பழங்குடியினருக்கு ரூ.7 கோடியில் வீடு கட்டும் பணி

150 பழங்குடியினருக்கு ரூ.7 கோடியில் வீடு கட்டும் பணி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, மலையாங்குளம் கிராமத்தில், 178 பழங்குடியினருக்கு, 8.22 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டி தரப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றியத்தில், நடப்பாண்டில், காரியமங்கலம், நாஞ்சிபுரம், கருவேப்பம்பூண்டி, பென்னலூர், பழவேரி உள்ளிட்ட கிராமங்களில் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ், 77 பழங்குடியினர் குடும்பங்களுக்கு, தலா, 5.7 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டும் பணி நடைபெறுகிறது.இதே போன்று, ஆதவப்பாக்கம், சிலாம்பாக்கம், மானாம்பதி, பெருநகர், மருத்துவன்பாடி, குண்ணவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 73 குடும்பத்தினருக்கு, பழங்குடியினர் தொகுப்பு வீட்டு திட்டத்தின் கீழ், தலா 4.63 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டுமான பணி நடைபெறுகிறது.பருவ மழை காலம் விரைவில் துவங்க உள்ளதால், வீடு கட்டுமான பணிகளை முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா என, பழங்குடியினர் எதிர்பார்த்துள்ளனர்.இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் கூறியதாவது:உத்திரமேரூர் ஒன்றியத்தில், பழங்குடியினர் மக்களுக்கான வீடு கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அக்குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.இப்பணிகள் முடிவுற்றதும் அம்மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை