உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பள்ளியில் சமையல் கூடம் கட்டுமான பணி

 பள்ளியில் சமையல் கூடம் கட்டுமான பணி

உத்திரமேரூர்: -ரெட்டமங்கலத்தில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், 8.44 லட்சம் ரூபாய் செலவில், புதிய சமையல் கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், ரெட்டமங்கலத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, படிக்கும் மாணவ -- மாணவியருக்கு சத்துணவு தயார் செய்ய, பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் உள்ளது. கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சமையல் கூடம், பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. எனவே, புதிய கட்டடம் கட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ், 8.44 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, பள்ளி வளாகத்தில் வேறொரு இடத்தில், புதிய சமையல் கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் கூறியதாவது: ரெட்டமங்கலம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில், 8.44 லட்சம் ரூபாய் செலவில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, சமையல் கூடம் பயன்பாட்டிற்கு வரும். அதுவரைக்கும் பழைய கட்டடத்திலே உணவு சமைத்து மாணவ -- மாணவியருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி