உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கன்டெய்னர் லாரி பழுதால் பொன்னேரிக்கரையில் நெரிசல்

கன்டெய்னர் லாரி பழுதால் பொன்னேரிக்கரையில் நெரிசல்

காஞ்சிபுரம்: பொன்னேரிக்கரை பகுதியில், கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை பகுதி வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. பொன்னேரிக்கரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பால பணிகள் இன்னும் முழுமையடையாததால்,அப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று பழுதடைந்த கன்டெய்னர் லாரி பாலம் அருகே ஓரம் கட்டி நின்றது. இதனால், பொன்னேரிக்கரை பகுதியில் பெங்களூரு நோக்கி சென்ற வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. நெரிசலை சீர்படுத்த வந்த போலீசாருக்கும்,அவ்வழியே சென்ற வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பழுதான வாகனத்தை சரி செய்த பின், அங்கிருந்து சென்றது. இதனால், பல கி.மீ., துாரம் நெரிசலில் சிக்கிய வாகனங்கள் மெல்ல நகர்ந்து சென்றதால்,போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ