உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான பணிகளை முடிக்க கெடு

 ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான பணிகளை முடிக்க கெடு

காஞ்சிபுரம்: கட்டுமான பணிகளை, மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு, பொதுப்பணி துறை அதிகாரிகள் 'கெடு' விதித்துள்ளனர். காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு, கோட்ட பொறி யாளர் சோமசுந்தர் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் அருள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஒப்பந்ததாரர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஒப்பந்த பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என, அவர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ