உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிதி விடுவிக்காததால் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்

நிதி விடுவிக்காததால் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஐந்து வட்டாரங்களிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள், பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பல்வேறு பணிகளுக்கு, இதுவரை நிதி கிடைக்கவில்லை என மாவட்ட முழுதும் ஒப்பந்ததாரர்கள் புலம்பி வருகின்றனர்.ஊராட்சிகளில் பள்ளி கட்டடங்கள் புதிதாக கட்டியது, முதல்வர் சாலை திட்டத்தில் சாலை அமைத்தது, மத்திய அரசின் திட்டத்தில் வடிகால் அமைத்தல், நமக்கு நாமே, உள்ளிட்ட திட்டங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் நிதி விடுவிப்பதில் அந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் தாமதமாக செயல்படுவதால், பல்வேறு சிக்கலுக்கு ஆளாவதாக பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ