மேலும் செய்திகள்
மீடியனில் மோதிய பைக்; இரு நண்பர்கள் உயிரிழப்பு
04-Jul-2025
ஸ்ரீபெரும்புதுார்ஒரகடம் அருகே, சாலையை கடக்க முயன்ற பைக் மீது, கார் மோதியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.ஒரகடம் அருகே, வேண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 46. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, 'ஹோண்டா டியோ' பைக்கில் மனைவி அஞ்சலை, 44, உடன், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வரணவாசி சென்று, மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, பண்ருட்டி சந்திப்பில் வேண்பாக்கம் கிராமத்திற்கு செல்ல திரும்பிய போது, அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த கார், நாகப்பன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தம்பதி இருவரும் உயிரிழந்தனர்.ஒரகடம் போலீசார் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
04-Jul-2025