உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணியர் கூட்டம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணியர் கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, வேலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்பதி, புதுச்சேரி, வந்தவாசி என, பல்வேறு முக்கிய வழித்தடங்களில், 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பண்டிகை, முகூர்த்தம், திருவிழா உள்ளிட்ட நாட்களில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பயணியர் கூட்டம் அதிகரிப்பது வழக்கம்.இந்நிலையில் சென்னை, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளியூர்களில் பணிபுரிவோர், தீபாவளி தொடர் விடுமுறைக்கு காஞ்சிபுரம் வந்தோர், விடுமுறை முடிந்து நேற்று பணிபுரியும் ஊருக்கு செல்ல நேற்று பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.இதனால், நேற்று மாலையில் இருந்தே பேருந்து நிலையத்தில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயம்பேடு, தாம்பரம், வேலுார் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் இடம்பிடிக்க முண்டியடித்தபடி பேருந்தில் ஏறினர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழக அலுவலர் கூறியதாவது:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு, தினமும் 11 பேருந்துகள் வாயிலாக 48 நடை இயக்கப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை மண்டலம் சார்பில், செய்யாறு, வந்தவாசியில் இருந்து சென்னை செல்லும் 50 பேருந்துகளும், காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்கின்றன.தீபாவளியையொட்டி, காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், கூடுதலாக சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில், 28 பேருந்துகளை கூடுதலாக இயக்கி வருகிறோம்.தீபாவளி விடுமுறைக்காக காஞ்சிபுரம் வந்தவர்கள், ஒரே நாளில் திரும்பி செல்வதால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பயணியர் கூட்டம் அலைமோதியது.பயணியரின் கூட்டத்திற்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு செல்வதற்காக கூடுதல் பேருந்து இயக்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில், சென்னை, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க, காஞ்சிபுரம் போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மு.முத்தமிழ்செல்வன்,பேருந்து பயணி,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை