உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காரை- - வேடல் சாலை சேதம் குடியிருப்புவாசிகள் அவஸ்தை

காரை- - வேடல் சாலை சேதம் குடியிருப்புவாசிகள் அவஸ்தை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - பரந்துார் சாலையில் உள்ள காரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, காரை கிராமம் வழியாக வேடல் கிராமத்திற்கு செல்லும் 3 கி.மீ., துார கிராம சாலை உள்ளது.இந்த சாலை வழியாக பரந்துார், சிறுவாக்கம், காரை ஆகிய பல்வேறு கிராமவாசிகள், வேடல் வழியாக கூத்திரம்பாக்கம், இலுப்பப்பட்டு, ஏனாத்துார் ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்கள் செல்வதால், 2 கி.மீ., சாலை ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.குறிப்பாக, மழைக்காலத்தில் சாலையில் தேங்கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, காரை கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை