உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோர தடுப்புகள் சேதம் வாகனங்கள் விழும் அபாயம்

சாலையோர தடுப்புகள் சேதம் வாகனங்கள் விழும் அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, வெங்காரம் வழியாக சிலாம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இச்சாலையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் குறுகிய சாலை வளைவுகள் உள்ளன.சாலையோரத்தில், 4 அடி ஆழமுள்ள விளை நிலங்களும், நீர் வரத்து கால்வாயும் உள்ளன. இதில், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விழுவதை தடுக்க, நெடுஞ்சாலை துறையினர் சாலையோர தடுப்புகள் அமைத்து இருந்தனர்.இந்நிலையில், சிலாம்பாக்கம் பகுதியில் உள்ள சாலையோர தடுப்புகள் மீது வாகனங்கள் மோதியதால், தடுப்புகள் சேதமடைந்து சரிந்து விழுந்துள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, சேதமடைந்துள்ள சாலையோர தடுப்புகளை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ