உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த மாத்துார் சாலை

சேதமடைந்த மாத்துார் சாலை

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாத்துார் ஊராட்சியில் சேதமடைந்த சாலையில் நடந்து செல்லும் பகுதி மக்கள் வழுக்கி விழுந்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் இந்திரா நகர் பிரதான சாலை வழியே சென்று வருகின்றனர். இந்த சாலை பல ஆண்டு களாக சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது, பெய்து வரும் மழையில், சாலை முழுதும் பள்ளங்களாக மாறி, மழைநீர் தேங்கி சகதியாக மாறியுள்ளது. இந்த சாலையில் பயணிப்பது கடும் சவாலாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், சகதியான சாலையில் சறுக்கி விழும் அச்சத்தில் செல்கின்றனர். எனவே, இந்திரா நகர் சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை