உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோர இரும்பு தடுப்பு சேதம் அவளூரில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர இரும்பு தடுப்பு சேதம் அவளூரில் வாகன ஓட்டிகள் அவதி

வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராமத்தில் இருந்து, ஆசூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. ஆசூர் சுற்று வட்டார கிராமவாசிகள், இச்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில், அவளூர் முருகன் கோவில் அடுத்த சாலையையொட்டி விவசாய நிலங்கள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளன. மேலும், அச்சாலை பகுதியில் குறுகிய வளைவுகள் உள்ளன.இதனால், சாலையோர தாழ்வான நிலப்பகுதியில் வாகனங்கள் கவிழ்ந்து விடக்கூடாதென, அடுத்தடுத்து இரண்டு இடங்களில், சாலையோரத்தில்இரும்பு தடுப்புகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த தடுப்புகள், தற்போது சேதமடைந்து, கீழே விழுந்து காணப்படுகின்றன. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.எனவே, சாலையோரம் சேதம் அடைந்த தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை