உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆபத்தான மின் ஒயர்கள் ஏ.டி.எம்.,மில் அச்சம்

ஆபத்தான மின் ஒயர்கள் ஏ.டி.எம்.,மில் அச்சம்

காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், பஞ்சாப்நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் இயங்கிவருகிறது.இம்மையத்தில், தினமும் நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம்., மையத்தின் தரையின் மீது செல்லும் மின் ஒயர்கள் அறுந்து, வெளியே தெரியும் நிலையில் உள்ளன.மேலும், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியேறும் நீர், ஏ.டி.எம்., மையத்திற்குள் விழுவதால், மின்கசிவு ஏற்பட்டு, ஏ.டி.எம்., மையத்திற்கு வருவோர் மின்விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.இதனால், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வருவோர், அச்சத்தில் தவிக்கின்றனர். எனவே, ஏ.டி.எம்., மையத்தில், வெளியே தெரியும் நிலையில் உள்ள மின் ஒயரை சீரமைக்க, வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.உமாசங்கர், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ