உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துணை முதல்வர் உதயநிதி காஞ்சி வருகை ரத்து

துணை முதல்வர் உதயநிதி காஞ்சி வருகை ரத்து

காஞ்சிபுரம்:தமிழக துணை முதல்வர் உதயநிதி பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று, நேரில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தார்.அரசு திட்ட பணிகளையும், பயனாளிகளையும் நேரில் சந்தித்து குறைகளை கேட்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும், மாவட்ட அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.மேலும், கலெக்டர் வளாக கூட்டரங்கில், அனைத்து துறை அதிகாரிகளிடையே ஆய்வு கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி பயண திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை