தினமலர் செய்தி எதிரொலி - குடிநீர் குழாய் சீரமைப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது.நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டு சீரமைப்பு பணி நேற்று நடந்தது.