அடிப்படை வசதி குறித்து ஒன்றிய கூட்டத்தில் ஆலோசனை
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது.உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா தலைமையில் நேற்று நடந்தது.ஒன்றியக் குழு துணைத் தலைவர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ.பானுமதி, சூரியா முன்னிலை வகித்தனர்.அதில், ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்தும், சாலை மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.