உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி

காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி

ஸ்ரீபெரும்புதுார்:கோடை காலங்களில் மேய்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாமல் அலைகின்றன. இதனால், கால்நடைகள் தண்ணீர் தேடி அலையாத வகையில், ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, தினமும் கால்நடைகளுக்கு தேவையாக தண்ணீரை தொட்டியில் நிரப்ப வேண்டும். அந்த வகையில், குன்றத்துார் ஒன்றியம், நாட்டரசம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட, சிறுவஞ்சூர் கிராமத்தில், 2018 ம் ஆண்டு, கால்நடைகள் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.குடிநீர் தொட்டி கட்டப்பட்டு ஆரம்ப காலங்களில், தொட்டி தண்ணீர் நிரப்பப்பட்டு, கால்நடைகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதையடுத்து, நான்கு வருடங்களாக, கால்நடைகள் குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது.தற்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், கால்நடைகள் தண்ணீரின்றி அலைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், கால்நடைகள் தண்ணீர் தொட்டியில், தண்ணீரை நிரப்பி பராமரிக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை