உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அவளூர் ஏரியில் கருவேல மரங்கள் நீதிமன்றம் கூறியும் அகற்றாததால் அதிருப்தி

அவளூர் ஏரியில் கருவேல மரங்கள் நீதிமன்றம் கூறியும் அகற்றாததால் அதிருப்தி

வாலாஜாபாத்:அவளூர் ஏரிக்கரையின் இருபுறமும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 290 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிநீரைக் கொண்டு அப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.அவளூர் ஏரிக்கரையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முள் காடு போன்று காட்சி அளிக்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும் வகையிலான சீமை கருவேல மரங்களை ஊராட்சிகள் தோறும் அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் வாயிலாக உத்தரவிட்டும், இங்கு அதற்கான நடவடிக்கை இல்லை என அப்பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, அவளூர் கிராம விவசாயிகள் கூறியதாவது:அவளூர் ஏரிக்கரையை பல ஆண்டுகளாவே சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால், ஏரியின் மதகு மற்றும் கலங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஏரிக்கரை வழியை பயன்படுத்தி சென்று வர இயலாத நிலை தொடர்கிறது.மேலும், சாகுபடி காலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ள டிராக்டர், டில்லர் இயந்திரம் போன்ற வாகனங்களை ஏரிக்கரை மீது கொண்டு செல்ல முடியவில்லை.சீமை கருவேல மரங்களால், ஏரி நீர்பிடிப்பு பகுதியில் சேகரமாகி உள்ள தண்ணீரை விரைந்து உறிஞ்சிக் கொள்ளும் நிலை உள்ளது.எனவே, அவளூர் ஏரிக்கரையின் இருபுறமும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை