உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கையில் பணம் இல்லையா; ஜிபேயில் அனுப்பு! ஸ்ரீபெரும்புதுாரில் திருநங்கைகள் அட்டகாசம்

 கையில் பணம் இல்லையா; ஜிபேயில் அனுப்பு! ஸ்ரீபெரும்புதுாரில் திருநங்கைகள் அட்டகாசம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிறுத்தம் அருகே, தனியாக நடந்து வரும் இளைஞர் மற்றும் வடமாநிலத்தவரை பிடித்து, பணம் கேட்டு மிரட்டி, திருநங்கைகள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம். ஸ்ரீபெரும்புதுாரில், ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை என, ஐந்து சிப்காட் தொழில் பூங்காக்களில் 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், தமிழகம் உட்பட வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான வெளிமாநிலத்தவர் வாடகைக்கு தங்கி, பணிப்புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் முக்கிய பஜார் பகுதிகளில், திருநங்கைகள், இளைஞர்களை மடக்கி, வலுக்கட்டாயமாக பணம் கேட்டு மிரட்டி வசூலித்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து செல்லும் வடமாநில தொழிலாளர்களை மடக்கி, தலை முடியை பிடித்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர். கையில் பணம் இல்லை என்று தெரிவித்தாலும், கூகுள் - பே, ஜி - பே செயலி மூலம் பணம் அனுப்பு என்று நிர்பந்திக்கின்றனர். இதனால், மற்ற இளைஞர் அவர்களை கண்டதும் தலை தெரிக்க ஒடுகின்றனர். திருநங்கைகளில் இது போன்ற செயல், வழிப்பறிக்கு ஈடானது என்று, அப்பகுதி மக்கள் குற்றசாட்டு தெரிவிக்கின்றனர். எனவே, இது போன்ற அராஜக போக்கில் ஈடுபடும் திருநங்கைகள் மீது, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை