உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தவிர்த்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கணபதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தவிர்த்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கில் உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை