மேலும் செய்திகள்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
26-Jun-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.பேரணியில் 500 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பல்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.உத்திரமேரூர் காவல் நிலையம் சார்பில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பேருந்து நிலையம் பகுதியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியரிடம் போலீசார், போதைப்பொருள் பயன்பாட்டை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
26-Jun-2025