உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புழுதி பறக்கும் கீழம்பி சாலை வாகன ஓட்டிகள் அவதி

புழுதி பறக்கும் கீழம்பி சாலை வாகன ஓட்டிகள் அவதி

கீழம்பி:செவிலிமேடு - கீழம்பி புறவழி சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுமிடத்தில், புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு உயர்மட்டபாலத்தில் இருந்து, சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, கீழம்பியில் இணையும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, செவிலிமேடு-- கீழம்பி புறவழி சாலையை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணி கடந்த பிப்., மாதம் துவங்கி நடந்து வருகிறது. சாலை விரிவாக்கப்பணி நடைபெறுமிடங்களில் வானங்கள் செல்லும்போது, பனி மூட்டத்தைப்போல, புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே செல்கின்றனர்.இவ்வழியாக நடந்து செல்வோர் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண்களில் துாசு விழுவதோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சாலை விரிவாக்க பணி நடைபெறும் இடங்களில், புழுதி பறக்காமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், லாரி வாயிலாக தண்ணீர் தெளிக்கவும், சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை