மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
08-Nov-2025
ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, முகத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட மூதாட்டியின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரிக்கின்றனர். சுங்குவார்சத்திரம் அடுத்த, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி, 70; கணவர் உயிரிழந்ததை அடுத்து, தனியாக வசித்து வரும் அவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் அருகே, சுண்டல் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் முகத்தில் காயங்களுடன் மூதாட்டி உயிரிழந்து கிடந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள், சுங்குவார்சத் திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். மூதாட்டியின் முகத்தில் காயங்கள் இருந்ததால், யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே, மூதாட்டியின் இறப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.
08-Nov-2025