உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரவு நேரத்தில் பணிபுரிய மின் வாரிய ஊழியர்கள் அச்சம்

இரவு நேரத்தில் பணிபுரிய மின் வாரிய ஊழியர்கள் அச்சம்

காஞ்சிபுரம், மின் நிலையங்களில், இரவு நேர ஊழியர்கள் பணிபுரிவதற்கு அச்சமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மின் வாரிய கோட்ட அலுவலங்களின் கீழ், 41 துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில், கள உதவியாளர், கம்பியாளர், மின்பாதை ஆய்வாளர், ஆக்க முகவர், வணிக ஆய்வாளர், இளநிலை மற்றும் உதவி மின் வாரிய பொறியாளர் உள்ளிட்ட 1240 பணியிடங்கள் உள்ளன. இந்த பணியாளர்களின் மூலமாக மின் நுகர்வோர் மற்றும் தொழில் வழிதடங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான பிரச்னைகள், மின் வினியோகம், பழுது நீக்குவது, புதிய தடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர, இரவு நேரத்தின் மின்சாரம் தடை ஏற்பட்டால், அடை உடனடியாக சரி செய்வதற்கு மின் ஊழியர்களை நியமிக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், கம்பியாளர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட 461 பணியிடங்கள் காலியாக இருப்பதால், மின் சாரம் தொடர்பான புகார்களை சரி செய்ய முடியால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு ஒரு மின் வாரிய ஊழியர் கூட இல்லை. மேலும், கிராமப்புறங்களில் இருக்கும் மின் நிலையங்களில் தனி நபர் ஒருவரை இரவு நேர பணிக்கு நியமிக்கும் போது, ஊழியருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி வருகின்றனர். காரணம் சமீபத்தில், காஞ்சிபுரம் நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியரை மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர். இதனால், இரவு நேர பணிக்கு மின் வாரிய ஊழியர்களை நியமிக்கும் போது, இரு ஊழியர்கள் இருக்கும் வகையில் நியமிக்க வேண்டும் என, மின் வாரிய ஊழியர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ravi Kumar
ஆக 27, 2025 12:36

இவ்வளவு பேரு இருந்தும் திருவிழா களங்களில் மின் திருட்டு இருக்கிறது .பாதையில் மின் கசிவு இருக்கிறது ஓர் உயிர் பலியானால் 20 லச்சம் தேவை....திறன் இல்லாத மின் வரியம். தனியார் மயம் ஆக்கப்பட வேண்டும் .


புதிய வீடியோ