உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அழைப்பை ஏற்க மறுக்கும் மின் வாரிய அதிகாரிகள்

அழைப்பை ஏற்க மறுக்கும் மின் வாரிய அதிகாரிகள்

காஞ்சிபுரம்: மின் வாரிய அதிகாரிகள் அழைப்பை ஏற்பதில்லை என, மின் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மின் பகிர்மான கோட்டங்கள் உள்ளன. இதில், 15க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மின் கம்பங்களில், மின் கம்பி துண்டிப்பு மற்றும் மின் மாற்றிகளில் பியூஸ் துண்டிப்பு ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்வதற்கு, மின் நுகர்வோர் மின் வாரிய அலுவலர்களை மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டால், மின் வாரிய அதிகாரிகள் அழைப்பை ஏற்கவில்லை. குறிப்பாக, வேளியூர் துணை மின் நிலையத்தில், மின் ஒயர் நேற்று முன்தினம் அறுந்து விழுந்தது. மின் வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டால், அழைப்பை ஏற்கவில்லை. நேற்று காலை, அதே கிராம மின் மாற்றியில் பியூஸ் போய்விட்டது. அதை சரி செய்ய அழைப்பு விடுத்தும், மின் வாரிய அதிகாரிகள் வரவில்லை. ஐந்து மணி நேரம் கழித்து, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மின் ஊழியரை அழைத்து வந்து, பியூஸ் போட வேண்டியிருந்தது. எனவே, மின் வாரிய அதிகாரிகள் சரியான முறையில், பொது மக்களின் அழைப்பை ஏற்று, பதில் அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே நேரத்தில் பல்வேறு அழைப்பு கள் வருவதால், பதில் அளிக்க தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும், மின் நுகர்வோரின் குறைகளை உடனுக்குடன் சரி செய்து விடுகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி