உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர் மண்டிய கால்வாய் துார்வார வலியுறுத்தல்

புதர் மண்டிய கால்வாய் துார்வார வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு சோமசுந்தரம் நகர், வள்ளலார் தெருவில் மழைநீர் வெளியேறும் வகையில், மாநகராட்சி சார்பில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாய் மண் திட்டுகளாலும், புதர்போல புல் வளர்ந்துள்ளதாலும், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் செவிலிமேடு வள்ளலார் தெருவில், புல் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ