உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர்மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

புதர்மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மதங்கீஸ்வரர் கோவில் தெரு வழியாக மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன.இதனால், கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக செல்ல வேண்டிய மழைநீர், கழிவுநீருடன் கலந்து சாலையில் வழிந்தோடுகிறது.எனவே, பருவமழை தீவிரமடைவதற்குள் மதங்கீஸ்வரர் கோவில் தெரு வழியாக செல்லும் கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை